கினிகத்தேனை பிரதேசத்தில் வகுப்பறை ஒன்றினுள் வைத்து மாணவர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அப்பாடசாலையின் உயர்தரப் பிரிவில் கல்வி பயின்று வந்த மாணவர்கள் மூவர் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலையின் 10 ஆம் தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவர் படையணியை சேர்ந்த மாணவர் ஒருவரை பாடசாலையில் உள்ள அறை ஒன்றினுள் வைத்து பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தனர் என குறித்த மாணர்கள் மூவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இம்மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பாடசாலை ஒழுக்காற்று குழு மட்டத்தில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
அதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய மேலதிக விசாரணைகளுக்காக இவ்விடயம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்துடன் மேலும் மாணவர்கள் எவராவது தொடர்புப்பட்டுள்ளனரா என கண்டறியும் பொருட்டு பாடசாலை ஒழுக்காற்று குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






