ஏன் இப்படி வெறித்துப் பார்க்கிறாய் என்று கேட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றேன் : கொலையாளி வாக்குமூலம்!!

648

ஏன் இப்படி வெறித்து பார்க்கிறாய் என்று கேட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றேன் என பெண் பொறியலாளர் கொலை வழக்கில் கைதான கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளதாக இந்தியாவின் புனே பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்­பவம் தொடர்­பாக கேரள பொலிஸ் தரப்பில் தெரி­வித்­துள்­ள­தா­வ­து,

இந்­தி­யாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரசிலா ராஜூ (வய­து 25) வயதான இவர் புனே பகுதியிலுள்ள இன்போஸிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த வாரம் விடுமுறை நாளான ஞாயிறன்று தனது பணியை செய்வதற்காக ரசிலா அலுவலகம் சென்­றுள்ளார்.

சம்­ப­வத்­தன்று பகல் 2 மணியளவில் அலுவலகத்துக்கு ­சென்ற ரசிலாவை அவரது மேலாளர் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.

பதில் இல்லாததால், பாதுகாவலரை பார்த்து வரும் படி கூறியுள்­ளார். பாதுகாவலர் சென்று பார்த்தபோது ரசிலா வேலை செய்யும் 9ஆவது மாடியில் வையரால் கழுத்து நெரிக்க பட்ட நிலையில் மயக்கமாக கிடந்துள்­ளா­ர்.

இதுகுறித்து பொலி­ஸா­ருக்­கு தகவல் அளிக்கப்பட்தையடுத்து, சம்பவ இடத்திற்கு ­வி­ரைந்த பொலிஸார் உடனடியாக ரசிலாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்­ள­னர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரசிலா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்­துள்­ள­னர்.

இந்த கொலை குறித்து பொலி­ஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலை­யில், குறித்த நிறு­வ­னத்­தின் பாதுகாப்புக் காவலர் பாபின் என்ற இளைஞர் (வயது 25) அந்தப் பெண்ணை கொலை செய்துள்ளமை தெரிய வந்துள்­ளது.

இந்தநிலையில் கொலையாளியை மும்பையிலுள்ள ரயில் நிலையத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலை குறித்து பாபினிடம் விசாரித்ததில், “ஏன் வெறித்து பார்க்கிறாய் என்று கேட்டதாகவும் இது குறித்து நிறுவன மேலாளரிடம் புகார் தெரிவித்தார். இதில் ஆத்திரமடைந்து கழுத்தை வயரால் இறுக்கி கொன்றேன்” என வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர்.

சசிலாவின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப் பட்டதையடுத்து ரசிலாவின் உறவினரான அஞ்சலி நந்தகுமார் பொலிஸில் கூறியதாவது, “சம்பவத்தன்று ரசிலா என்னிடம் ‘நான் இன்று சமர்ப்பிக்கும் வேலையைப் பொறுத்துதான், நான் பெங்களூருக்கு பணியிடமாற்றம் பெறுவதற்கான சாத்தியங்கள் நிறுவனத்திடமிருந்து பெப்ரவரி முதல் வாரத்தில் கிடைக்குமா என்பது தெரியும்”, என கூறிய சில நிமிடங்களிலே, “என் அறைக்குள் யாரோ நுழைவதுபோல் தெரிகிறது.

நான் சற்று நேரத்திற்குப்பின் அழைக்கிறேன்”, என்று அவசர அவசரமாக அலைபேசியைத் துண்டித்திருக்கிறார். இவைதான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள்!

அதன்பின், இரவு 8:30 மணியளவில், கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு இருந்த அவரின் உயிரற்ற உடல் மட்டுமே அவரது பணியறையில் காணப்பட்டது. மேலும், ரசிலாவுக்கு ஞாயிறுக்கிழமை அன்று அலுவலகத்தில் தனியாக வேலை செய்வதில் உடன்பாடில்லை.

அவரது மேலதிகாரிக்கு, அவர் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே, தன்னை அதிக நேரம் வேலை வாங்குவதாக தனது குடும்பத்தாரிடம் அவ்வப்போது புலம்பி இருக்கிறார். கொலையான ரசிலாவின் கடைசி நிமிடங்கள் போராட்டமாக கழிந்தது என்பதை பிரேத பரிசோதனைநிருபித்துள்ளது. ‘கொலையாளி அவரை ஏதோ ஒரு பொருளை வைத்து தாக்கியிருக்கிறார்.

அவரது இடது தோள்பட்டையில் பல் கடித்த காயங்கள் இருக்கின்றன. முகத்திலும் மார்பிலும் இருக்கும் காயங்களை பரிசோதித்ததில், அவர் கொலையாளியுடன் மிகவும் போராடி இருக்கிறார். அப்போது அவர் கழுத்தை நெரிக்கப்பட்டு, வாய் மற்றும் மூக்கு வழியாக இரத்தம் சிதறியிருக்கிறது” என்றிருக்கிறார்கள்.

ரசிலாவுக்கும் அவரது மேலதிகாரிக்கும், பணியிட மாற்றம் குறித்து வாக்குவாதம் நடந்ததாக ரசிலா கூறினார். இதன்போது ‘உனக்கு வெகுவிரைவில் பாடம் கற்பிக்கிறேன்’ என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

ரசிலாவின் மரணத்தை குறித்த நிறுவனமே பெறுப்பேற்க வேண்டும். இந்த மரணத்தில் மேலதிகாரிக்கும் சம்பந்தமுள்ளது என்றும் பொலிஸார் இதுகுறித்து விசாரித்து விரைவில் நட வடிக்கை எடுக்குமாறும் கோரி­யுள்ளார்.