வவுனியாவில் மக்களின் நிலங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறக் கோரி ஆர்ப்பாட்டம்!!

374

 
முல்லைத்தீவு கோப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் தங்களுடைய வாழ்வதாராத்துக்கான காணிகளை விடுவிக்கக்கோரி கோப்பாப்பிலவு விமானப்படைத் தளத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (10.02.2017) காலை 9.30 மணியளவில் வவுனியா நகர பஸ் நிலையத்திற்கு முன்பாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், பொதுமக்கள், வர்த்தர்கள் என நூற்றுக்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

வேண்டும் வேண்டும் காணிநிலம் வேண்டும், மக்களின் நிலங்களிலிருந்து இரானுவமே வெளியேறு , கோப்பாபிலவு மக்கள் இலங்கையர் இல்லையா? என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.