ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் லண்டன் பயணித்த தீவிரவாதி : பாதுகாப்புப் படையினரால் கைது!!

235

லண்டன் – ஸ்டேன்டட் விமான நிலைத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட நபர் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செவ்வாய்கிழமை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான 330ஏ எயார் பஸ் விமானம் லாகூரில் இருந்து பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி பயணித்தது.

எனினும், இந்த விமானம் பிரித்தானியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தகவல் கிடைத்ததையடுத்து, குறித்து விமானம் பிரித்தானிய விமான படையின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, குறித்த விமானத்தை சோதனையிட்ட போது, விமானத்தில் இருந்து கலீட் பாக் (Khalid Baqa) என்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் பல்வேறு தீவிரவாத சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

52 வயதான, குறித்த நபர் கடந்த 2012ஆம் ஆண்டு தீவிரவாத குற்றச்சாட்டில் தனது நண்பர்களுடன் கைதுசெய்யப்பட்ட ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், குறித்த நபரிடம் தீவிரவாத விடயங்கள் அடங்கிய 300க்கும் மேற்பட்ட இறுவெட்டுக்கள் அவரது உடமைகளுடன் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, 2013ம் ஆண்டு பிரித்தானிய நீதிமன்றம் இவருக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும் விதித்தது.

இதேவேளை, பிரித்தானிய விமான படையின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட குறித்த விமானம், பாகிஸ்தான் விமான சேவைக்கு வழங்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் ஒன்றாகும்.

மேலும், குறித்த விமானம் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி பயணித்த போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்காக ஊழியர்களுடன் 150 பயணிகள் விமானத்தில் பயணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.