உலகின் அதிவேக மனிதன் என மீண்டும் நிரூபித்தார் உசைன் போல்ட்!!

256

ஜமைக்காவின் உசைன் போல்ட்டின் அணி, Nitro மெய்வல்லுனர் போட்டிகளின் 400X100 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. Nitro மெய்வல்லுனர் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்டிகள் இரண்டு கட்டங்களைக் கொண்டது என்பதுடன், இரண்டு கட்டங்களின் முடிவில் கூடுதல் புள்ளிகளைப் பெற்ற அணி வெற்றிக்கு பாத்திரமான அணியாக அறிவிக்கப்படும்.

லேக் சைட் உள்ளக அரங்கில் (Lakeside Stadium ) நீட்ரோ மெய்வல்லுனர் போட்டிகளின் 400 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன.

6 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தானே உலகின் அதிவேக மனிதன் என்பதனை உசைன் போல்ட் மீண்டுமொருமுறை நிரூபித்தார்.

இந்த அஞ்சலோட்டப் போட்டியில் 930 புள்ளிகளை சுவீகரித்து உசைன் போல்ட்டின் All-Stars அணி முதலிடத்தைக் கைப்பற்றியது.

இந்தப் போட்டியின் போது, அஞ்சல் கோலை மாற்றுகின்ற சந்தர்ப்பத்தில் போட்டியின் விதிமுறைகளை மீறி செயற்பட்டமைக்காக அவுஸ்திரேலிய அணிக்கு 10 புள்ளிகள் குறைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் இரண்டாமிடத்தினையும் சீன அணி மூன்றாமிடத்தினையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.