3A சித்திகளை பெற்றும் பல்கலைகழகம் செல்ல முடியாத நிலையில் மாணவி!!

741

2015ம் ஆண்டு உயர்தரத்தின் கலை பிரிவில் கல்வி கற்று 3ஏ சித்திகளை பெற்றுக் கொண்டு பல்கலைக்கழக விண்ணப்பப்படிவம் கிடைக்காத மாணவி ஒருவர் தொடர்பில் மொனராகலை பிரதேசத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

புத்தல கல்வி வலையமைப்பிற்கு உட்பட கொட்டமுதுன மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர பரீட்சை எழுதிய ஆர்.எம்.சவும்யா உதேஷிகா என்ற மாணவியே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக தனக்கு கடிதம் ஒன்று கிடைத்ததாகவும், 2015 – 2016 கல்வி பட்டப்படிப்பிற்காக அழகியல் பிரிவிற்கு ஆணைக்குழுவினால் தான் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ugc.ac.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அந்த பட்டப்படிப்பிற்காக 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அந்த மாணவி கூறியுள்ளார்.

இணையத்தள வசதி இல்லாமையினால் பஸ்ஸர நகரத்தின் தனிப்பட்ட நிறுவனத்தின் அந்த இணையத்தளம் ஊடாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் தனக்கு பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைக்கவில்லை என அந்த மாணவி கூறியுள்ளார்.

பின்னர் ஆராய்ந்து பார்த்த போது மாணவி இணைய சேவை பெற்றுக் கொண்ட இடத்தில் உரிய முறையில் பதிவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

தனக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலை தொடர்பில் மாணவி கவலை வெளியிட்டுள்ளார்.