பஸ்ஸின் கத­வு­களை வேக­மாக மூடி­யதன் மூலம் திரு­டனை சிக்­க­ வைத்து பொலிஸில் ஒப்­ப­டைத்த சாரதி!!

554

பஸ் ஒன்றில் திரு­டிய நபர் ஒருவர், பஸ்­ஸி­லி­ருந்து வெளி­யேற முற்­பட்­ட­போது கதவை திடீ­ரென மூடி அந்­ந­பரை சிக்க வைத்த சாரதி, அந்த பஸ்ஸை பொலிஸ் நிலை­யத்­துக்குக் கொண்டு சென்ற சம்­பவம் கொலம்­பி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

கொலம்­பி­யவின் பொகோட்டா நகரில் பஸ் ஒன்றில் ஏறிய நபர், பயணி ஒரு­வரின் தொலை­பே­சியை திரு­டிக்­கொண்டு பஸ்­ஸி­லி­ருந்து வெளி­யே­று­வதை பஸ் சாரதி உணர்ந்தார்.

அப்­போது விரை­வாக சிந்­தித்த மேற்­படி சாரதி பஸ்ஸின் கத­வு­களை வேக­மாக மூடினார். இதனால், மேற்­படி திருடன் கதவு இடுக்கில் சிக்­கிக்­கொண்­டதால் அவன் தப்பிச் செல்ல வழி­யி­ருக்­க­வில்லை.

பின்னர் மேற்­படி பஸ்ஸை பொலிஸ் நிலை­யத்­துக்குச் செலுத்திச் சென்ற சாரதி, திரு­டனை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்தார்.

பஸ் சார­தியின் சம­யோ­சித நட­வ­டிக்­கையை பொகோட்டா மாவ­ட்ட பொலிஸ் ஆணையாளர் டியகோ வஸ்குவெஸ் வெவுகாவை பாராட்டியுள்ளார்.