சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மின்சாரக் கார் அறிமுகம்!!

211

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக எதிர்வரும் காலங்களில் மின்சார உயர் தூக்கி மற்றும் மின்சார மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

முதற்கட்டமாக சீகிரியா சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து இந்த வாகனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

சீகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொல்பொருள் நிர்மாணங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சீகிரியவை பார்வையிடுவதற்காக செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதற்கமைய மின்சார உயர தூக்கி மற்றும் மின்சார மோட்டார் வாகனங்களை அறிமுகப்படுத்தி வைப்பது அவசியம் என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் வெளிநாட்டு விஜயங்களில் ஈடுப்படவுள்ளமையினால் நாளை முதல் அமைச்சர் அகில விராஜ்காரியவசம் பதில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.