பெண்ணின் மூளைக்கு அடியில் உயிருடன் கரப்பான் பூச்சி : சென்னை வைத்தியசாலையில் அகற்றப்பட்டது!!

304

 
பெண்­ணொ­ரு­வரின் மண்­டை­யோட்­டுக்குள் மூளைக்கு அடியில் உயி­ருடன் காணப்­பட்ட கரப்பான் பூச்சியொன்றை சென்னை வைத்­தி­ய­சா­லை­யொன்றில் மருத்­து­வர்கள் அகற்­றி­யுள்­ளனர்.

சென்னை ஈஞ்­சம்­பாக்­கத்தைச் சேர்ந்த 42 வய­தான செல்வி என்­ற இப் பெண், அண்­மையில் இரவில் ஆழ்ந்த உறக்­கத்தில் இருந்­த­போது, அவரின் மூக்­கினுள் கரப்­பான்­பூச்சி நுழைந்­ததாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதை செல்வி அறிந்­தி­ருக்­க­வில்லை. எனினும், மறுநாள் கடு­மை யா­ன வலி கார­ண­மாக இப் பெண் அடுத்த சில நிமி­டங்­களில் மருத்­து­வர்­க­ளிடம் சிகிச்சை பெற சென்­ற­போ­திலும் மருத்­து­வர்­களால் அவ­ருக்கு என்ன பிரச்­சினை என்­பதை கண்­ட­றிய முடி­ய­வில்லை.

வலி குறை­யா­தி­ருந்த நிலையில், இறு­தியில் சென்னை ஸ்டான்லி மருத்­து­வ­ம­னையில் காது – மூக்கு – தொண்டை சிகிச்சைப் பிரிவில் சிகிச்­சைக்­காகச் சேர்ந்தார்.

அங்கு மூக்கில் மேற்­கொள்­ளப்­பட்ட என்­டோஸ்­கோப்பி பரி­சோ­த­னையில், கரப்பான் பூச்­சி­யா­னது மண்­டை­யோட்டின் அடிப்­ப­கு­தி யில் இரண்டு கண்­க­ளுக்கும் நடுவில் மூளைக்கு அருகில் இருந்­தமை தெரி­ய­வந்­தது. இதன்­பின்னர், 45 நிமிட சிகிச்­சைக்கு பின்பு கரப்பான்பூச்சி வெற்­றி­
க­ர­மாக வெளியே எடுக்­கப்­பட்­டது.

சென்னை ஸ்டான்லி மருத்­து­வ­ம­னையில் காது – மூக்கு – தொண்டை சிகிச்சை பிரிவுத் தலைவர் டாக்டர் எம்.என்.சங்கர் இது குறித்து கூறு­கையில், இப் பெண்ணின் மூக்குக் குழாயை ஆராய்ந்­த­போது, அதற்குள் சிறிய கால்கள் அசை­வதைக் கண்டேன். மேலும் ஆராய்ந்­த­போது, சுமார் 5 சென்ரி மீற்றர் நீளத்தில் அசா­தா­ர­ண­மான ஏதோ ஒன்று இருப்­பதை உணர்ந்தேன்.

பின்னர், அது கரப்­பான்பூச்சி ஒன்றின் அடிப்­பாகம் எனத் தெரி­ய­வந்­தது. அதை­ய­டுத்து உறிஞ்சும் கருவி, கவ்­விப்­பி­டிக்கும் உப­க­ரணம் ஆகி­ய­வற்றை கொண்டு கரப்பான் பூச்­சியை எடுத்தோம். கரப்­பான்­பூச்சி இடது புறத்தில் இருந்­தி­ருந்தால், நோய்த்­தொற்று ஏற்­பட்டு, மூளையைப் பாதித்­தி­ருக்கும்” என்றார்.

இக்­ க­ரப்பான்பூச்சியா­னது இப் ­பெண்ணின் மண்­டை­யோட்­டுக்குள் சுமார் 12 மணித்­தி­யா­லங்கள் உயி­ருடன் இருந்­துள்­ளது என டாக்டர் எம்.என். சங்கர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து செல்வி கூறு­கையில், “இரவு உறக்­கத்தில் இருந்­த­போது மூக்­குக்குள் பூச்சி உள்­பக்கம் நக­ரும்­போது கண்களில் எரிச்சல் ஏற்பட்டு, நீர் வந்தது. தலைக்குள் கூசுவது போன்றும், ஊர்வது போன்ற உணர்வால் இரவு முழுவதும் அவதிப்பட்டேன். இப்போது குணமாகிவிட்டது’ என்றார்.