வட மாகாணத்தை வாட்டும் வறட்சி : மக்கள் பரிதவிப்பு!!

970

நாட்டில் தொடரும் வறட்சியான காலநிலை 14 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 699 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 93 ஆயிரத்து 386 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, கண்டி, குருநாகல், கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, அநுராதபுரம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, புத்தளம் முதலான 14 மாவட்டங்களே வறட்சியான காலநிலையால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

வட மாகாணத்தில் 49 ஆயிரத்து 477 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.