நான் முதல்வரானால் போடப்போகும் முதல் கையெழுத்து சஸ்பென்ஸ் : சசிகலா!!

331

பரபரப்பான சூழ்நிலையில் நேற்று இரவு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருந்தார் சசிகலா.

அதில் முக்கியமாக, சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு எப்படி வெளியாகும் என்ற கேள்விக்கு, “என்ன தீர்ப்பு வந்தாலும் அதை நாங்கள் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வோம்.” என பதில் கொடுத்திருந்தார். அவர் அளித்த பேட்டி இதோ,

நீங்கள் தொடர்ந்து ஆளுநரிடம் வலியுறுத்தியும், இந்த காலதாமதத்திற்கு என்ன காரணம்?

“எங்களிடம் 129 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்காங்க. இந்த லிஸ்ட்டை ஆளுநரிடம் கொடுத்து உரிமை கேட்டோம். ஆனால், இதுவரை அவர்களிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. என்னைப் பொறுத்தவரை இத்தனை நாட்கள் பொறுத்துவிட்டோம். இனியும் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.”

ஆளுநரின் இந்த காலதாமதத்திற்கு காரணம் பா.ஜ.க-வும் தி.மு.க-வும்-னு நீங்க ஏற்கனவே சொல்லி இருந்தீங்க…

குறுக்கிடுகிறார், “இந்த கருத்தை வெளியில் உள்ளவங்கதான் பேசிட்டு இருக்காங்க. இதை எல்லாம் நான் கூர்ந்து கவனிச்சு இருக்கேன். அதுதான்.”

ஓ.பன்னீர்செல்வம் 2012-ம் ஆண்டிற்கு பிறகு உங்களை சந்திக்கவே இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது மட்டும்தான் பேசினேன் என சொல்லி இருக்கிறாரே?

இது இங்குள்ள அமைச்சர்களுக்கே தெரியுமே. அவர் பேசினாரா இல்லையானு. இப்ப அவர் எதுவுமே தெரியாத மாதிரிதான பேசிட்டு இருக்கார். அப்படி இருக்கும்போது இதை எப்படி அவர் ஒத்துக்குவார்?

இப்ப அவர் எங்கிருந்தோ வானத்தில் இருந்து குதிச்சுவந்த பன்னீர்செல்வம் மாதிரிதான் எங்களுக்குத் தெரியுது. ஆனால், கோபாலபுரத்தில் இருந்து குதிச்சாரா? என்பது எங்களுக்குத் தெரியாது. சிரிக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் அமர்ந்தபின் தான், உங்க மீது குற்றச்சாட்டு எல்லாம் வைச்சாரே… அவர் அங்க போக போகிறார் என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியுமா?

“நான் கேள்விபட்டது. அவர் கூட சில டைரக்டர்கள் இருக்காங்களாம். அவங்க என்ன சொல்லுறாரோ… அதுபடிதான் அவர் செய்வதாக சொல்லுறாங்க. (சிரிப்பு) எனக்கு தெரிஞ்சு அங்க போய் உட்கார்ந்த காரணம் என்னென்னு நான் நினைக்கறேன்னா… கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருந்தால்… என்னமோ ஏதோனு நீங்க எல்லாம் (மீடியாக்காரங்க) போய்டுவீங்கல்ல. அதுக்காக பண்ண மாதிரிதான் தெரியுது.”

எம்.எல்.ஏ-க்கள் எல்லாரையும் கூவத்தூரில் அடைத்து வைத்து உள்ளதாக குற்றாச்சாட்டு எழுகிறதே…” குறுக்கிடுகிறார்.

“என்ன சொல்லிறீங்க? புரியலையே….” என்றதும், மீண்டும் கேள்வியை கேட்கிறார் செய்தியாளர்.

“இல்லைங்க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவங்க தொகுதிக்கு சென்று மக்கள் கருத்தை அறிந்தபிறகு, இங்கு வரட்டும், உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கட்டும்’னு பலரும் சொல்லுறாங்களே..”

“ஏங்க ஒண்ணா சேர்ந்து, இருக்குற இடத்துலேயே அவரு (ஓ.பி.எஸ்) ஆளை தூக்கிட்டுப் போய்டுவோம்னு சொல்லுறாரே… இவங்க எல்லாரும் ஒற்றுமையாக, இங்க சுதந்திரமாகத்தான் இருக்காங்க. இதில் ஒன்றும் தவறு இல்லையே….”

தீர்ப்பு வெளிவரப்போகுது. எப்படி வரும்னு நினைக்கறீங்க?

என்னைப் பொறுத்தவரை.. என்ன தீர்ப்பு வந்தாலும் அதை நாங்க இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வோம்.”

சரி, இந்தப் பிரச்னை எல்லாம் முடிந்து. நீங்கள் முதல்வராக பதவியேற்றால்… முதல் கையெழுத்தை எதற்கு போடுவீர்கள்?

“அது ஒரு சஸ்பென்ஸுங்க. அதை அன்னைக்கு பார்த்துக்கலாம்.” என மீண்டும் சிரித்து விடைபெறுகிறார்.