இலங்கைக்கான வீசா நடைமுறையை அமெரிக்கா தளர்த்தவில்லை!!

448

இலங்கை பிரஜைகள் தொடர்பான வீசா நடைமுறையில் அமெரிக்கா மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வௌியான தகவல்களை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துள்ளது. தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்திலேயே அவர்கள் இதனைப் பதிவிட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பான மேலதிகத் தகவல்களை http://www.ustraveldocs.com/lk/lk-niv-visaapply.asp என்ற இணையத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கான வீசா நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் அந்த நாட்டு ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாகவும் செய்திகள் வௌியாகின.

இதற்கமைய இலங்கையர்கள் சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக அதிகபட்சம் 180 நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கலாம் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததோடு, அதற்கு மேலதிகமாக இருப்பவர்கள் வீசாவை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.