தோழியை காப்பாற்ற சென்ற மாணவிகள் பரிதாப மரணம்!!

497

diகோவை மாவட்டம் பொள்ளாச்சி மரபோட்டையை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் கோகிலா(6). இவர் பொள்ளாச்சி அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இவரும் உடுமலை தோட்டம்பட்டி பழனிசாமி என்பவரின் மகள் பிரேமேஸ்வரி (12) என்பவரும் தோழிகள்.

பிரேமேஸ்வரி உடுமலையில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். தோழிகள் 2 பேரும் ஓணம் பண்டிகையை யொட்டி கொழிஞ்சாம்பாறையில் வசிக்கும் தங்களது தோழிகளான சுஜித்ரா(17), மலர் (18) என்பவரது வீட்டுக்கு சென்றனர்.

மாணவிகள் கொழிஞ்சாம்பாறை பள்ளசேனாவிலுள்ள குளத்தில் குளித்து மகிழ தோழிகள் முடிவெடுத்தனர். அதன்படி அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளித்தனர். மலர் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றார். எதிர்பாராத விதமாக தண்ணீரில் சிக்கிக்கொண்டார். உயிருக்கு போராடிய மலர் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பினார்.

அதிர்ச்சியடைந்த தோழிகள் 3 பேரும் மலரை காப்பாற்ற குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்றனர். ஆனால் தோழிகளும் நீரில் சிக்கிக் கொண்டனர். 4 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இவர்களின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். குளத்தில் மூழ்கிய சுஜித்ரா மற்றும் மலரை காப்பாற்றினர். கோகிலா மற்றும் பிரேமேஸ்வரியை காணவில்லை.



சுமார் ஒரு மணி நேர தேடுதல் வேட்டைக்குப்பின் கோகிலாவையும், பிரேமேஸ்வரியையும் பிணமாக மீட்டனர். இது குறித்து கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து கோகிலா, பிரேமேஸ்வரி பிணங்களை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.