மாத்தறை – ரன் தீவுக்கு அருகில் உள்ள பாலத்தின் மேலிருந்து கீழே கடலில் குதித்து காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளது.
குறித்த ஜோடி குதித்தவுடன் அவர்களை காப்பாற்ற முடியாது போனதாகவும் கடல் அலையின் வேகம் அதிகரிப்பே அதற்கு காரணம் தெரியவந்துள்ளது.
இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாத்தறை பட்டுதா வீதியில் வசிக்கும் 19 வயதான மொஹமட் அஸ்தான் மற்றும் காலி – மயிட்டிபே பகுதியில் வசிக்கும் கரிஸ்மா தேவதா என்ற யுவதியுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.