வவு­னியா தொண்டர் ஆசி­ரி­யையின் சடலம் மன்­னாரில் மீட்பு : சந்தேகத்தில் கணவர் கைது!!

860

வவு­னி­யாவில் உள்ள பாட­சாலை ஒன்றில் கட­மை­யாற்­றிய தொண்டர் ஆசி­ரியை ஒருவர் காணாமல் போன நிலையில் ஒன்றரை மாதங்­களின் பின்னர் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார்.

அவ­ரது சடலம் சிதை­வ­டைந்த நிலையில் மன்னார் மாவட்டம் மடு பிர­தேச செய­லாளர் பிரி­வுக்கு உட்பட் கீரிசுட்டான் பகு­தியில் புதன்­கி­ழமை மாலை மீட்­கப்­பட்­டது.

மடு பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற இர­க­சிய தக­வலின் அடிப்­ப­டையில் குறித்த சடலம் மிகவும் உருக்­கு­ழைந்த நிலையில் மீட்­கப்­பட்­டுள்­ளது.

சட­ல­மாக மீட்­கப்­பட்­டவர் வவு­னியா பாண்­டியன் குளம் கிரா­மத்தைச் சேர்ந்த இரண்டு பிள்­ளை­களின் தாயான நிஷாந்தன் யாழினி (32) என தெரிய வந்­துள்­ளது. இவ­ரது மரணம் தொடர்பில் மன்­னாரில் கடமை புரியும் அவ­ரது கணவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

சடலம் மீட்­கப்­பட்­டுள்ள இடத்­திற்கு நேற்று வியாழன் மாலை சென்ற மன்னார் மாவட்ட நீதவான் சட­லத்தை பார்­வை­யிட்­டுள்­ள­தோடு மன்னார் பொது வைத்­தி­ய­சா­லையில் ஒப்­ப­டைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார். மேல­திக விசா­ர­னை­களை மடு பொலிஸார் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

குறித்த ஆசி­ரியர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி காணாமல் போயுள்­ள­தாக தெரிய வந்­துள்ள நிலையில் அவரது சடலத்தை ஆடைகள் மற்றும் தடையங்கள் மூலம் அவரது உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டது.

-மெட்ரோ நியூஸ்-