பாடசாலையின் இல்லவிளையாட்டுப் போட்டிகள் : மயங்கிவிழுந்த மாணவர் மரணம்!!

453

நீர்கொழும்பு இந்து மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் போது சுகயீனம் காரணமாக மாணவன் ஒருவன் விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த பாடசாலையில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போதே குறித்த மாணவன் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் உயிரிழந்தவர், அதே பிரதேசத்தை சேர்ந்த 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விளையாட்டுப்போட்டிகளின் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த குறித்த மாணவன் திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

மாணவனை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இந்த மாணவன் எந்தவித போட்டிகளிலும் கலந்துகொள்ளவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.