ஒர் உடல் இரு தலை: அதிசயக் குழந்தை!!

445

இந்தியாவில் இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை, சிறிது நேரத்திலே இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை ஹரியானாவின், யமுனா நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நஸ்ரின் என்ற பெண்ணுக்கு இரட்டை தலையுடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த சில மணிநேரங்களிலே அக்குழந்தை இறந்துள்ளது. நஸ்ரின்- நசிம்மொகமத் தம்பதிக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இரண்டு தலைகளுடன் குழந்தை பிறப்பது அதிசயம் என்றும் இது கடவுள் கொடுத்த வரம் எனவும் கூறியுள்ளனர்.

இது போன்ற ஒட்டுப் பிறவிகள் 100,000 கருவுக்கு ஒருமுறை நிகழும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது, கருவில் உள்ள முட்டை முழுமை அடையாத போது இரட்டையர்கள் போன்ற சம்பவம் நிகழும் என தெரிவித்துள்ளனர்.