உடலுக்கு வெளியே இதயத்தைக் கொண்ட ரஷ்ய சிறுமிக்கு அமெரிக்காவில் சத்திரசிகிச்சை செய்ய முயற்சி!!

972

உடலுக்கு வெளிப்புறமாக இதயம் அமைந்துள்ள நிலையில் பிறந்த 7 வயதான சிறுமிக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். ரஷ்யாவைச் சேர்ந்த வேர்சவியா போருன் கொன்சரோவா எனும் இச் சிறுமி உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறினர். ஆனால், உற்சாகமான சிறுமியாக வளர்ந்து வருகிறார் வேர்சவியா.

இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான மருத்துவ சிகிச்சைகளுக்காக தற்போது இச் சிறுமி அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இச் சிகிச்சை வெற்றியளித்தால் அவரின் இதயத்தை உடலுக்குள் வைப்பதற்கான சத்திரசிகிச்சை செய்யப்படும் என அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தன்னைப் பற்றி வேர்சவியா கூறுகையில், இப்படியான இதயம் எனக்கு மாத்திரம் தான் உள்ளது. எனது இதயத்தை பாதிக்காத ஆடைகளை நான் அணிகிறேன். நடப்பது, பாய்வது ஆகியவற்றில் நான் ஈடுபடுகிறேன். ஓடுவதும் எனக்குப் பிடிக்கும், ஆனால், நான் ஓடக்கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.