வவுனியாவில் விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவ ஓமந்தை கமநல கல்வி அபிவிருத்தி நிதியம் உதயம்!!

270

 
வவுனியா ஓமந்தைப் பகுதி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரிவுக்குட்பட்ட விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியை உயர்த்துவதற்காக ஓமந்தை கமநல கல்வி அபிவிருத்தி நிதியம் என்னும் அமைப்பின் அங்குரார்பண நிகழ்வு நேற்று நடைபெற்றது. ஓமந்தை கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியாவில் அதிகளவிலான விவசாயிகளைக் கொண்ட பகுதியாக ஓமந்தைப் பகுதி விளங்கி வரும் நிலையில், காலநிலை மாற்றங்கள் மற்றும் கடந்தகால போர் நடவடிக்கைகள் காரணமாக இப்பகுதியில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவாகும் மாணவர்களும், கல்வியைத் தொடரும் மாணவர்களும் பல்வேறு கஸ்ரங்களை எதிர்நோக்கி சில மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைவிட்டும் உள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான இப்பகுதி மாணவர்களின் தொடர் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ஒமந்தை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரிவுக்குட்பட்ட விவசாயிகள், கல்வித்துறை சார்ந்தோர், வர்த்தக பிரிவினர் ஆகியோரை உள்ளடக்கி கல்விக்கான உதவியை வழங்கும் நோக்கோடு இவ் அமைப்பு உமதயமாகியது.

ஓமந்தைப் பகுதி கமநல அபிவிருத்தி திணைக்களத் தலைவர் ஏ.நாகரசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார், ஓமந்தைப் பகுதி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.திலீபன், கமநல திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள், அப்பகுதி பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.