வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன இராணுவ வீரர் 54 ஆண்டுகளின் பின் தாயகம் திரும்பினார்!!

306

 
வழி­த­வறி இந்­திய எல்­லைக்குள் நுழைந்த சீன இரா­ணுவ வீரர் ஒருவர் 54 ஆண்­டு­களின் பின் சீனா­வுக்குத் திரும்­பு­வ­தற்கு இந்­திய அர­சினால் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த வாங் க்யூ எனும் இந்த இரா­ணுவ வீரர், 1963 ஆம் ஆண்டு இந்தோ – சீனப் போரின் பணியில் இருந்த சம­யத்தில் வழி­த­வறி இந்­திய எல்­லைக்குள் நுழைந்­துள்ளார். இதை­ய­டுத்து, இந்­திய இரா­ணு­வத்தால் அவர் கைது செய்­யப்­பட்டு, 7 ஆண்­டுகள் சிறை­வைக்­கப்­பட்டார்.

அந்தத் தண்­டனை முடிந்­ததும் தனது நாட்­டுக்குத் திரும்பிச் சென்­று­வி­டலாம் என்ற நம்­பிக்­கை­யுடன் வாங் க்யூ இருந்தார். ஆனால், தண்­டனைக் காலம் முடிந்­த­வுடன் அவரை மத்­தியப் பிர­தே­சத்தில் உள்ள டிரோடி என்னும் கிரா­மத்தில் இந்­திய இரா­ணு­வத்­தினர் கொண்டு போய்­விட்­டனர்.

கட­வுச்­சீட்டு விசா போன்ற எந்த ஆவ­ணங்­களும் இல்­லாத நிலையில் அவர் அங்­கேயே வாழ ஆரம்­பித்தார். அந்த ஊரைச் சேர்ந்த பெண்­ம­ணி­யையே திரு­மணம் செய்­து­கொண்டார். வாங் க்யூ 4 பிள்­ளை­க­ளுக்கு தந்­தை­யானார். பின்னர் பேரப்­பிள்­ளை­க­ளுக்குத் தாத்­தாவும் ஆனார்.

தன் குடும்­பத்­துடன் மகிழ்ச்­சி­யான வாழ்க்­கையை வாழ்ந்­தாலும், அவர் உள்­ளத்தின் ஓரத்தில் ஓர் ஆசை அவரை உறங்­க­வி­டாமல் செய்­தது. தான் பிறந்த மண்­ணையும், தன் இரத்த சொந்­தங்­க­ளையும் காண வேண்டும் என்று அவர் ஏங்க ஆரம்­பித்தார்.

1980களில் சீனாவில் உள்ள தன் சொந்­தங்­க­ளுடன் கடிதப் போக்­கு­வ­ரத்தை ஏற்­ப­டுத்­திக்­கொண்டார். இது, அவ­ரது சொந்­தங்­களைக் காண வேண்டும் என்ற ஆசையை இன்னும் தூண்­டி­யது. பல மனுக்கள் கொடுத்தும் இந்­திய அரசு இந்த சீன வீரரின் கோரிக்­கையை ஏற்­க­வில்லை.

2009இல் வாங் க்யூவின் மைத்­துனர் இந்­தி­யா­வுக்குச் சென்று அவரைச் சந்­தித்துச் சென்றார். 2013 ஆம் ஆண்டில் சீன அரசு, வாங் க்யூவுக்கு கட­வுச்­சீட்டு வழங்­கி­யது. ஆனால், இந்­திய தரப்பில் அவ­ருக்கு விசா வழங்­கப்­ப­ட­வில்லை.

தன்னால் சீனா போய் தான் பிறந்த ஊரின் காற்றைச் சுவா­சிக்க முடி­ய­வில்­லையே என்ற பரி­த­விப்­புடன் இருந்த வாங் க்யூவை, பிர­பல செய்தி நிறு­வனம் ஒன்று அடை­யாளம் கண்டு, அவரின் 54 ஆண்டு கால போராட்­டத்தைச் செய்­தி­யாக வெளி­யிட்­டது.

இந்தச் செய்தி, இரண்டு நாடு­க­ளிலும் பெரும் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யது. சீனாவில் செய்தி ஊட­கங்கள் மட்­டு­மல்­லாமல், சமூக வலை­த்த­ளங்­க­ளிலும் வாங் க்யூவுக்கு ஆத­ரவுக் குரல்கள் கூடின. இதனை உணர்ந்த இந்­திய வெளி­யு­றவுத் துறை, மத்­திய உள்­துறை அமைச்­ச­கத்தை அணுகி, வாங் க்யூவை, சீனா­வுக்கு அனுப்­பு­வ­தற்கு வேண்­டிய நட­வ­டிக்­கை­களை எடுத்­தது.

இந்த நிலையில், கடந்த 9 ஆம் திகதி தன் மகன், மரு­மகள் மற்றும் பேத்­தி­யுடன் சீனா­வுக்குப் பறந்தார் வாங் க்யூ. சீன விமான நிலை­யத்தில் அவரின் உற­வி­னர்கள், பத்­தி­ரி­கை­யா­ளர்கள் எனப் பலர் காத்­தி­ருந்­தனர். அன்­றைய தினம் சீனர்­களின் முக்­கியப் பண்­டி­கை­யான விளக்குத் திரு­விழா நடை­பெற்­றது.

விமான நிலையம் சென்ற வாங் க்யூவை அவரின் உற­வி­னர்கள், சகோ­த­ரர்கள் கட்டித் தழு­விக்­கொண்­டனர். செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய வாங் க்யூ, “இந்த நாள் என் வாழ்வில் சந்­தோ­ஷ­மான நாள். என் பால்ய நண்பர்களை, என்னுடன் இராணுவத்தில் பணியாற்றிய சகவீரர்களை நான் தேடிப்போய் சந்திக்கப் போகிறேன்” என்றார்.

அவருக்கு சீன அரசாங்கம் அவரின் சொந்த ஊரில் வாழ்வதற்கு இலவசமாக நிலம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.