லொத்தர் சீட்டிழுப்பில் 18.8 கோடி ரூபாவை வென்ற யுவதிக்கு இப்படி ஒரு நிலையா?

575

பிரிட்­டனில் மிக இளம் வயதில் லொத்தர் சீட்­டி­ழுப்பு ஒன்றில் 18.8 கோடி ரூபா பரிசை வென்ற யுவதி ஒருவர், இந்த லொத்தர் வெற்­றி­யினால் தனது வாழ்க்கை நாச­மா­கி­யுள்­ள­தாகக் கூறி மேற்­படி லொத்தர் நிறு­வ­னத்­துக்கு எதி­ராக வழக்குத் தொடுக்கப் போவ­தாக தெரி­வித்­துள்ளார்.

ஜேன் பார்க்ஸ் எனும் இந்த யுவதி, 2013 ஆம் ஆண்டு யூரோ­மில்­லியன் எனும் லொட்டோ சீட்­டி­ழுப்பில் 10 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 18.8 கோடி ரூபா) பரிசை வென்றார்.

அப்­போது அவர் 17 வய­தா­ன­வ­ராக இருந்தார். இதன் மூலம் மிக இளம் வயதில் யூரோ­மில்­லியன் சீட்­டி­ழுப்பில் முதல் பரிசை வென்ற பெரு­மைக்­கு­ரி­ய­வ­ரானார் ஜேன் பார்க்ஸ்.

லொத்தர் சீட்­டி­ழுப்பில் எவ­ருக்கும் இவ்­வ­ளவு பெருந்­தொகை பரிசு கிடைத்தால் அதை தமது பேர­திர்ஷ்­ட­மா­கவே அவர்கள் கரு­துவர்.

ஆனால், தற்­போது 21 வய­தான ஜேன் பார்க்­ஸ் இதில் திருப்­தி­ய­டை­ய­வில்லை. இந்த லொத்தர் பரிசு கார­ண­மாக தனது வாழ்க்கை நாச­மாகி விட்­டது என்­கிறார்.

இவர் மேற்­படி லொத்தர் பணத்தில் இரு வீடு­களை வாங்­கி­ய­துடன் தனது மார்­ப­கங்­களைப் பெரி­தாக்­கு­வ­தற்­கான சத்­தி­ர­ சி­கிச்­சை­யையும் செய்­து­கொண்டார்.

தனது காத­ல­னுக்கும் அவர் பெரு­ம­ளவு அன்­ப­ளிப்­பு­களை வழங்­கி­யி­ருந்தார். ஆனால், பின்னர் அக்­கா­த­ல­னி­ட­மி­ருந்து அவர் பிரிந்தார்.

இந்­நி­லையில் அண்­மையில் அளித்த செவ்­வி­யொன்றில் ஜேன் பார்க்ஸ், இது தொடர்­பாக கூறு­கையில், மிக இளம் வய­தி­லேயே மில்­லி­ய­ன­ரா­னதால் தான் பெரும் மன அழுத்­த­தத்­துக்கு உள்­ளா­ன­தாகத் தெரி­வித்துள்ளார்.

‘அப்­ப­ரிசு எனக்கு கிடைத்­தி­ருக்­கவே கூடாது என எண்­ணு­கிறேன். 18 வயதுக்கு குறைந்தவர்கள் இந்த லொத்தர் சீட்டை வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கருதுகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.