மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்!!

444

மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை சிக்கனமாக மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான வானிலையால் நீர்மின் உற்பத்தி 8 வீதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நீர்மின் உற்பத்தி இடம்பெறும் பிரதான நீர்நிலைகளில் தற்போது 32.2 வீத நீர்மட்டமே காணப்படுகின்றது.

அதனால் மின் தேவையின் 92 வீதத்தை அனல் மின் நிலையங்களின் ஊடாகவே உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிலையின் கீழ் ஒன்றரை மாதங்களுக்கே நீர் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முழு நாடும் நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள நிலையில், பல மணித்தியாலங்கள் நீர் வீண் விரயமான சம்பவமொன்று மாவனெல்ல வெலிகல்ல பகுதியில் பதிவானது.

மாவனெல்ல வெலிகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு நீரை வழங்கும் குழாய் நேற்றிரவு 7 மணியளவில் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக நீர் தொடர்ந்து வெளியேறி வந்துள்ளது.