பிரிட்டனைச் சேர்ந்த யுவதி ஒருவர், தான் அதிக அழகாக இருப்பதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக கூறுகிறார்.
24 வயதான எம்மா ஹல்ஸ் எனும் இந்த யுவதி லண்டனிலுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனமொன்றில் சுயாதீன ஊழியராக பணியாற்றியவர்.
அண்மையில் தனது முகாமையாளர் தன்னை அழைத்து, “நீங்கள் பெஷன் ஷோவில் இருக்க வேண்டும்” எனக் கூறி தன்னை பணியிலிருந்து நீக்கியதாக எம்மா தெரிவித்துள்ளார்.
“வேலையிலிருந்து நீக்கப்பட்டதால் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். இந்த நிறுவனம் சாதாரண தோற்றம் கொண்டவர்களையே ஊழியர்களாக இணைத்துக்கொள்கிறது போலும். நான் நீளக் காற்சட்டையும் ஷேர்ட்டும் தான் அணிந்திருந்தேன். பொருத்தமற்ற வகையில் ஆடை அணிந்திருக்கவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.







