இறந்­து­விட்­ட­தாக கரு­தப்­பட்ட இளைஞர் மயா­னத்­துக்கு கொண்டு செல்­லப்­படும் வழியில் விழித்­தெ­ழுந்தார்!!

371

இறந்­து­விட்­ட­தாக கரு­தப்­பட்ட இளைஞன் ஒருவர், மயானத்துக்கு கொண்டு செல்­லப்­படும் வழியில் விழித்­தெ­ழுந்த சம்­பவம் இந்தியாவில் இடம்­பெற்­றுள்­ளது.

கர்­நா­டக மாநி­லத்தின் மனா­குந்தியைச் சேர்ந்த குமார் மேர்வாட் எனும் இந்த இளை­ஞ­ருக்கு ஒரு மாதத்­துக்கு முன்னர் கட்டாக் காலி நாய் ஒன்று கடித்­தது.

கடந்த வாரம் இந்த இளை­ஞ­னுக்கு கடும் காய்ச்சல் ஏற்­பட்­டதால் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். சுவா­சக்­க­ரு­விகள் பொருத்­தப்­பட்டு அவ­ருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

பின்னர், அந்த இளை­ஞரின் உடலில் தொற்­றுக்கள் அதி­க­மாக பர­வி­­யுள்­ள­தா­கவும் சுவா­சக்­க­ரு­விகள் இல்­லாமல் அவரால் உயிர்­வாழ முடி­யாது எனவும் மருத்­து­வர்கள் கூறினர்.

அதை­ய­டுத்து குமார் மேர்­வாட வீட்­டுக்கு அழைத்துச் செல்ல குடும்­பத்­தினர் தீர்­மா­னித்­த­தாக அவரின் மைத்­து­ன­ரான சர்­னப்பா நாயக்கர் தெரி­வித்­துள்ளார். அண்­மையில், குமார் சுவா­சிக்­காமல் இருப்­பதை அவ­தா­னித்த குடும்­பத்­தினர், அவர் இறந்­து­விட்­ட­தாகக் கரு­தினர்.

இறு­திக்­கி­ரி­யை­க­ளுக்­கான ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. வீட்­டி­லி­ருந்து சுமார் 2 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள மயா­னத்­துக்கு குமாரின் உடலை சுமந்து சென்­ற­போது, அவர் விழித்­தெ­ழுந்­ததால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

அதன்பின் தனியார் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் குமார் மேர்வாட் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். நாய்க்­க­டி­யினால் குமார் மேர்­வாட்­டுக்கு ஏற்­பட்ட தொற்­று­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வ­தாக டாக்டர் என். மகேஷ் தெரி­வித்­துள்ளார்.