வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் நான்கு பேர் சமூகத்துடன் இணைப்பு!!

433

 
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்று (22.02.2017) காலை சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப்பணியகத்தில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பணிப்பாளர் கேணல் ஹமில்டோன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், புனர்வாழ்வு நிலைய பயிற்சிப் பொறுப்பாளர் கேணல் சித்திரகுணதூங்க, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த குணசேகர, புனர்வாழ்வு நிலைய பின்னாய்வு அதிகாரி ஏகன் பெர்ணான்டோ, பூந்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சமயத் தலைவர்கள், முன்னாள் போராளிகளின் குடும்ப உறுப்பினர்கள், படையினர், பொலிசார், விமானப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய ஒருவருட புனர்வாழ்வைப் பூர்த்தி செய்த தேவராஜா ஜெகதீபன் (மட்டக்களப்பு), ரங்கசாமி நந்தகுமார் (மட்டக்களப்பு), யோசப் டின்டாஸ் விவிலியன் (மட்டக்களப்பு), கணேசன் துசாந்தன் (மட்டக்களப்பு) ஆகிய நான்கு பேர் தமது குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.