டெல்லியில் பெண்மணி ஒருவர் தனது மொபைல் பழுதான காரணத்தால், கடை ஊழியர்களிடம் வெறித்தனமாக சண்டை போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
மேற்கு டெல்லியில் உள்ள ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள மொபைல் கடையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் சாம்சங் மொபைல் வாங்கியுள்ளார்.
அந்த மொபைல் சரியாக இயங்கவில்லை என்று கடந்த 20-ம் திகதி கடை ஊழியர்களிடம் தெரிவித்து, அதற்கு பதிலாக புதிய மொபைல் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால், இதற்கு கடை ஊழியர்கள் மறுத்ததால், அம்மாவை அழைத்து வந்த அந்தப் பெண், கடையில் உள்ளவர்களைத் தாக்கியுள்ளார்.
இவர்களுக்கு ஆதரவாக இன்னொரு பெண்ணும் இணைந்து கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார். இந்தக் காட்சி கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அங்கிருந்த ஒருவரும் தனது மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த மூன்று பெண்கள் மீதும் டெல்லி பொலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
#WATCH: Three women created ruckus, vandalised a mobile phone store in Rajouri Garden, Delhi (20/02/17). pic.twitter.com/6ytJ3QzGnS
— ANI (@ANI_news) February 22, 2017






