மன்னாரில் இரு கட்சிகளுக்கிடையில் மோதல் : பொலிஸார் தடியடி (படங்கள்)

754

மன்னார் தாழ்வுபாட்டில் இரு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கல்வீச்சில் வயோதிபப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மதியம் 2 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

மன்னார் தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலையில் உள்ள 11ஆவது வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் இரு கட்சிகளுக்கு இடையில் இன்று மதியம் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் சிலர் கூட்டமாக இருந்ததை அவதானித்த மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் பொலிஸருக்கு இரகசிய தகவல் வழங்கியுள்ளனர்.



இதனைத் தொடர்ந்து பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று அவர்களை துரத்திச் சென்ற சமயம் அவர்கள் வீடுகளுக்குள் சென்றுள்ளனர். இதன்போது பொலிஸார் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ளவர்கள் மீது தடியால் தாக்குதல்களை மேற்கொண்டதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த இரு கட்சிகளுக்கும் இடையில் பரஸ்பர கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வீட்டினுள் இருந்த வயோதிபப் பெண் அந்தோனிக்கம் பெரேரா(65) என்பவர் காயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நிலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர கலகம் அடக்கும் பொலிஸார் தாழ்வுபாட்டு கிராமத்தில் குவிக்கப்பட்டனர். ஒரு சில மணி நேரத்தின் பின் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

2 3 4 5