பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது வீட்டை திருமணம் செய்துகொண்டுள்ளதாகக் கூறுகிறார். 43 வயதான டெபோரா ஹொட்ஜ் எனும் இப் பெண், மேற்படி வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவதை தவிர்ப்பதற்காக இத்தீர்மானத்தை மேற்கொண்டாராம்.
பேக்ஸ்லேஹீத் நகரில் டெபோரா வசிக்கும் வீடு விற்பனை செய்யப்படவுள்ளதால் அவ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தை அவர் எதிர்நோக்குகிறார். இதனால், இவ்வீட்டை சொந்தமாக்குவதற்காக பொதுமக்களிடம் 400,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் நிதி திரட்டும் நடவடிக்கைய ஆரம்பித்தார்.
இதில் அவருக்கு அதிக ஆதரவு கிடைக்கவில்லை. இவ் விடயத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காக தனது வீட்டை திருமணம் செய்துகொண்டுள்ளாராம் டெபோரா ஹொட்ஜ்.
இதற்காக, தன்னை மணமகளாக அலங்கரித்துக்கொண்டு திருமண வைபவமொன்றையும் டெபோரா நடத்தினாராம். “மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என நான் கவலையடையவில்லை என்கிறார் டெபோரா.