வவுனியாவிலும் வெள்ளை நிற பாதசாரிகள் கடவை அறிமுகம்!!

1590

 
வவுனியாவிலும் வெள்ளை நிற பாதசாரிகள் கடவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக வவுனியா வைரவப்புளியங்குளத்தில் பாதசாரிகள் கடவையை வௌ்ளை நிறமாக்கி இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாதசாரிகள் கடவைகளும் வௌ்ளை நிறமாக்கப்பட்டமையினையடுத்து தற்போது வடக்கு மாகாணத்திலிலும் செயற்படுத்து நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்குள் நாட்டிலுள்ள அனைத்து பாதசாரிகள் கடவைகளும் வௌ்ளை நிறமாக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.