வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு நிறைவடைந்த பின் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் 89 வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்ட வாக்கெண்ணும் நிலையங்களில் முதற்கட்டமாக தபால் மூலமான வாக்கு எண்ணப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் கனகராயன்குளம் சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தில் இடம்பெற்ற தவறுதலான துப்பாக்கி பிரயோகத்தை தவிர வேறெந்த அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.