வவுனியாவில் நெல் மூடைகளை திருடிய உயரதிகாரியை தேடி பொலிஸார் வலைவீச்சு : இருவர் சிக்கினர்!!

321

 
வவுனியா, பேயாடிகூழாங்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூடைகள் சிலவற்றை திருடி முச்சக்கர வண்டி ஒன்றில்கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உயர்அதிகாரி ஒருவர் உள்ளிட்ட மூவர் தொடர்பில் வவுனியா பொலிசாரிடம் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இதில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர் உள்ளிட்ட இருவர்கைது செய்யப்பட்டுள்ளதுடன் அரச அதிகாரி தப்பியோடியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பேயாடிகூழாங்குளம் பகுதியில் வயல் செய்த விவசாயி ஒருவர் கடும் வரட்சிகாரணமாக தனது நெற் பயிர்கள் அழிவடைந்த நிலையில் கிணற்றின் மூலம் நீர் இறைத்துஅவற்றை பாதுகாத்து தற்போது அறுவடை செய்து வருகின்றார்.

அறுவடை செய்த நெல் மூடைகளை வயல் அருகில் A9 வீதியில் அமைந்திருந்த கோவில் ஒன்றில் அடுக்கிவிட்டுவயலுக்கு சென்றுள்ளார்.

இதன்போது அப்பகுதிக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த வவுனியா மாவட்ட செயலக உயர் அதிகாரி ஒருவரும் வெளிநாட்டில் இருந்து வந்த அவரது சகோதரன் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய மூவரும் இணைந்து அங்கிருந்த நெல் மூடைகள் சிலவற்றைதிருடி முச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.

இதனை அவதானித்த விவசாயி உடனடியாக வேறு நபர்களுக்கும் தகவல் வழங்கியதையடுத்துகுறித்த முச்சக்கர வண்டியை குறித்த விவசாயியும், வேறு நபர்களும் இணைந்துவிரட்டி பிடித்துள்ளனர்.

இதன்போது வவுனியா மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உயர் அதிகாரி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்தநபரும், முச்சக்கர வண்டி சாரதியும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

இது தொடர்பில்வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்தபொலிசார் குறித்த இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். தப்பியோடிய அதிகாரியை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

-தமிழ்வின்-