60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான ஆரம்பப் பாடசாலை : 87 வயதான பாட்டியும் கற்கிறார்!!

549

 
இந்­திய கிரா­ம­மொன்றில் 60 வய­துக்கு மேற்­பட்ட பெண்­க­ளுக்­கான ஆரம்பப் பாட­சா­லை­யொன்று இயங்­கு­கி­றது. 90 வய­தா­னோரும் இப்­பா­ட­சா­லையில் அனு­ம­திக்­கப்­ப­டுவர்.

ஒரே நிறத்­தி­லான சேலையை சீருடையாக அணிந்­து­கொண்டு, முதுகில் புத்­தகப் பையை சுமந்­த­வாறு இப்­ பெண்கள் பாட­சா­லைக்குச் செல்­கின்­றனர். வாசிக்கவும் எழு­தவும் கணக்­குக்­கூட்­டவும் பழ­கு­வ­துடன், சிறார்கள் போன்று நேர்­சரி பாடல்­க­ளையும் இவர்கள் உற்­சா­க­மாகப் பாடு­கின்­றனர்.

மஹா­ராஷ்­டிரா மாநி­லத்தின் “தானே” மாவட்­டத்­தி­லுள்ள பன்­கனே எனும் கிரா­மத்தில் வயோதிப் பெண்­க­ளுக்­கான இந்த ஆரம்பப் பாட­சாலை உள்­ளது. “அஜி பாய்ன்ச்சி ஷாலா” என இப் பா­ட­சா­லைக்குப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

யோகேந்­திர பான்கர் என்­பவர் கடந்த வருடம் சர்­வ­தேச மகளிர் தினத்தை முன்­னிட்டு இப்­பா­ட­சா­லையை ஆரம்­பித்தார். 45 வய­தான யோகேந்­திர பான்கர், பங்­கனே ஸீலா பிரசாத் ஆரம்பப் பாட­சா­லையின் ஆசி­ரியர் ஆவார். தனது வீட்­டி­லி­ருந்து தினமும் 75 கிலோ­மீற்றர் தூரம் பயணம் செய்து, அஜி பாய்ன்ச்சி ஷாலா பாட­சா­லைக்குச் செல்­கிறார் இவர்.

“மோட்­ரியம் சரிட்­டபிள் ட்ரஸ்ட்” எனும் தொண்டு நிறு­வ­ன அமைப்­புடன் இணைந்து இப் ­பா­ட­சா­லையை யோகேந்­திர பான்கர் ஆரம்­பித்தார். இந் ­நி­று­வனம் இப்­ பா­ட­சாலை மாண­வி­க­ளான பெண்­க­ளுக்கு மென்­சி­வப்பு வர்ண சேலை சீருடை, பாட­சாலைப் பை, ஸ்லேற், சோக், மற்றும் கரும்­ப­லகை ஆகி­ய­வற்றை வழங்­கி­யுள்­ளது.

30 பெண்கள் இப் ­பா­ட­சா­லையில் கல்வி கற்­கின்­றனர். சிறார்­க­ளுக்­கான பாலர் பாட­சா­லை­களில் கடை­ப்பி­டிக்­கப்­படும் ஏறத்­தாழ அனைத்து நடை­மு­றை­களும் இப்­ பாட­சா­லை­யிலும் பின்­பற்­றப்­ப­டுகின்றனவாம்.

மராத்­திய மொழி அரிச்­சு­வடி, ஆரம்பக் கணிதம், பாலர் பாடல்கள் முத­லா­னவை இப்­ பா­ட­சா­லையில் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன. 60 வய­தான மாணவி காந்தா என்­பவர் கருத்துத் தெரி­விக்­கையில், இப்­ பா­ட­சா­லையில் சேர்­வ­தற்கு ஆரம்­பத்தில் தான் மிகவும் தயங்­கி­ய­தா­கவும் ஆனால், தனது வய­தை­யொத்த மற்­றொ­ருவர் இப்­ பா­ட­சா­லைக்கு செல்­வதைக் கண்டு தானும் இணைந்­து­கொண்­ட­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

இப்­போது என்னால் எனது தாய் மொழியில் எழு­தவும் வாசிக்­கவும் முடி­கி­றது. கல்­வியின் முக்­கி­யத்­து­வத்தை நான் உணர்ந்­து­கொண்­டுள்ளேன். எனது தன்­னம்­பிக்கை அதி­க­ரித்­துள்­ளது. வங்கி ஆவ­ணங்­களில் நான் முன்னர் கைவிரல் அடை­யா­ளத்­தையே இடுவேன். இப்­போது என்னால் கையெ­ழுத்­திட முடியும்.

மற்­ற­வர்­களின் உதவி எனக்குத் தேவை­யில்லை” எனவும் அவர் தெரி­வித்­துள்ளார். இப் ­பா­ட­சா­லை­யி­லேயே மிகவும் வய­தான மாணவியாக 87 வய­தான ரமாபாய். தனக்கு முறை­யாக காது கேட்­காத போதிலும், ஆரம்பக் கல்வி கற்­ப­தற்கு ஆர்வம் காட்­டு­கிறார்.

சிறு வயதில் கல்­வியின் முக்­கி­யத்­து­வத்தை நான் உணர்ந்­தி­ருக்­க­வில்லை. இப்­போது என்னால் வாசிக்­கவும் எழு­தவும் முடி­கி­றது” என்­கிறார் ரமாபாய் பாட்டி.

இந்த முதியோர் கல்வித் திட்­டத்தின் மூலம், மேற்­படி கிராம மக்­களின் எழுத்­த­றிவு ஏறத்­தாழ 100 சத­வீ­தத்தை நெருங்­கி­யுள்­ள­தாக யோகேந்­திரா பான்கர் தெரி­வித்­துள்ளார்.

அது மாத்­தி­மல்­லாமல், இக்­ கல்­வித்­திட்­டத்தின் காரணமாக, இக்கிராமத்தின் சுகாதார துறையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத் தியுள்ளது. திறந்த வெளியில் மலம்கழிக்கும் வழக்கம் இப்போது அங்கு இல்லை.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கழிவறை உள்ளது” எனவும் அவர் கூறுகிறார். கல்விக்கு வயது தடையில்லை என்பதை பன்கனே கிராம பாட்டிமார்கள் உணர்த்தியுள்ளனர்.