அரசின் அசமந்த போக்கினால் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவி!!

213

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் கிடைக்காமையினால், மாணவி ஒருவரின் எதிர்கால கனவு கலைந்துள்ளது.

சூரியவெவ, தெலவில்ல மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மாணவிக்கு, அனுமதி கடிதம் கிடைக்காத காரணத்தினால் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.

எல்.ஜீ.எச் நாயனா சஞ்ஜீவனி என்ற மாணவி 2015ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ள நிலை, அவருக்கு A மற்றும் இரண்டு B சித்திகள் கிடைத்துள்ளன.

இந்த சித்தி பல்கலைக்கழக வாய்ப்பை பெற்றுக்கொள்ள போதுமானதாக இருந்தமையினால், நாயனா விண்ணப்பம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அவர் எதிர்பார்த்ததனை போன்று ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு அவர் தெரிவாகியுள்ளார்.

அதற்கமைய ஜனவரி மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் அவர் பதிவு செய்ய வேண்டும், எனினும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அனுப்பிய கடிதம் பெப்ரவரி மாதம் ஆறாம் திகதியே அந்த மாணவிக்கு கிடைத்துள்ளது.

நாயனா வசிக்கும் தெலவில்ல என்ற கஷ்டப்பட்ட கிராமத்திற்கு உப தபால் நிலையம் ஒன்று உள்ள போதிலும், கடிதங்களை பகிர்வதற்கு ஊழியர்கள் இல்லாமை பெரும் குறையாக உள்ளது. மக்கள் தங்களுக்கு வரும் கடிதங்களை பெற்றுக் கொள்ள பல கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டும்.

தந்தையின் சுகயீனம் காரணமாக அவருக்கு குறித்த வாரத்தினுள் தபால் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டமையால் அவரது பல்கலைக்கழக கனவு கலைந்து போயுள்ளது.

“என்னை எப்படியாவது பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி, நான் பட்டம் ஒன்றை பெறுவதனை எனது பெற்றோர் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். அதற்காக அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் என்னை படிக்க வைத்தார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டும் பட்டதாரி கனவு தற்போது கலைந்துவிட்டது.

தன் கணவர் சுகயீனமாக இருந்த நிலையில் கூலி வேலை செய்து தனது மகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் அளவிற்கு கொண்டு வந்துள்ள போதிலும் அவரது பட்டதாரி கனவு கலைந்து விட்டது. தனது மகளின் வாய்ப்பை இல்லாமல் செய்ய வேண்டாம் என தான் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்வதாக நாயானாவின் தாயார் கேட்டுக் கொண்டுள்ளார்.

போதுமான அளவு ஊழியர்கள் தபால் நிலையத்தில் இல்லாமையே இதற்கு காரணமாகும். இந்த மாணவின் எதிர்கால கனவு சிதைந்து போனமைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். சலக கிராமங்களிலும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.