திருமணமான 22 வயது பெண் ஒருவர் 15 வயதான சிறுவனை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்காக கடுவெல பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்ற போது நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவருக்குமிடையில் ஏற்கனவே காதல் தொடர்பு இருந்ததாகவும் அதை நிறுத்தும்படி சிறுவனின் பெற்றோர் இருவரையும் எச்சரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்தப் பெண் சிறுவனை கடுவெல நகருக்கு வரும்படி தொலைபேசி மூலம் தெரிவித்து சிறுவன் கடுவெல நகருக்கு வந்ததும் முச்சக்கர வண்டியில் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சிறுவன் திடீரென வீட்டிலிருந்து வெளியேறி செல்வது குறித்து சந்தேகம் கொண்ட பெற்றோர் சிறுவனை பின்தொடர்ந்து தகவல்களைச் சேகரித்த பின்னர் நவகமுவ பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்படி நவகமுவ பொலிஸார் சிறுவனின் பெற்றோருடன் சென்று இருவரையும் கைது செய்துள்ளனர். கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.






