வவுனியாவில் தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டம்!!

571

 
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 5ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

இன்று (28.02.2017) மதியம் 2.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு ஜனாதிபதிக்கு தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

இப் போராட்டத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆரம்பித்துவைத்தார்.