வவுனியா கொல்களத்தினை மூடுமாறு பணிப்பு!!

230

வவுனியா கொல்களத்தினை மறுஅறிவித்தல் வரை மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் கொல்களத்தினை தற்காலிகமாக மூடுமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ம் திகதி குறித்த கெல்களத்தில் கொழும்புக்கு கொண்டு செல்வதற்காக வெட்டப்பட்ட மாடுகள் தொடர்பாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு தமது கடமைக்கு இடையூறு விளைவித்தாக தெரிவித்து வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் வெட்டப்பட்ட மாடுகளுக்கான ஆவணங்கள் இருந்தமையை கருத்தில் கொண்டு வெட்டப்பட்ட மாடுகளின் இறைச்சியை கொழும்புக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 15ம் திகதிக்கு வழங்கு மீண்டும் எடுக்கப்படவுள்ளது.

இந் நிலையில் இன்று குறித்த மாடு வெட்டும் கொல்களத்திற்கு வருகைதந்த மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த இடத்தை பார்வையிட்டதுடன் கொள்களத்தில் மாடுகள் வெட்டும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந் நிலையில் நகரசபை அதிகாரிகளுக்கும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை அதிகாரிகளுக்குமிடையில் கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.