மாவட்டத்தில் முதலாம் இடம் கிடைத்தும் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவி!!

285

கடந்தாண்டு வெளியான கல்வி உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற போதும் மாணவி ஒருவருக்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த தில்கி ரசாஞ்சலி என்ற மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

உயர் தரத்தில் கலைப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 34ஆம் இடத்தை பிடித்த மாணவி, பல்கலைக்கத்திற்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் இதுவரையில் அவருக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட தில்கி ரசாஞ்சலி என்ற மாணவி தெரிவித்துள்ளார்.

சிங்களம், பௌத்தம், கலை ஆகிய பாடங்களை தெரிவு செய்து 2 ஏ சித்திகள் மற்றும் ஒரு பி சித்தியும் பெற்றுள்ளார்.

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளுக்கமைய 1.6302 என்ற இசட் புள்ளிகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

எப்படியிருப்பினும் அவர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணபித்துள்ள போதிலும், அவருக்கு இதுவரையில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இது தொடர்பில் ஆராய்ந்த அதிகாரிகள் அவர் உயர் தரத்தில் தெரிவு செய்த பாடங்கள் கலை பிரிவுக்கான பாடங்கள் இல்லை எனவும், இதனாலேயே அவர் இந்த பிரிச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உயர் தரத்தில் சிறப்பான சித்திகளை பெற்று பல்கலைக்கழகத்திற்கு செல்ல முயற்சிக்கும் இந்த மாணவிக்கு, திருகோணமலை பல்கலைக்கழகத்தில் சந்தர்ப்பம் வழங்குவதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த மாணவியின் பெற்றோரிடம் இருந்த ஒரே காணியை குத்தகைக்கு வழங்கி அவரது கல்வி நடவடிக்கைகளுக்கு செலவிட்டுள்ள நிலையில், இன்று வரையில் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை.

தற்போது அந்த காணியையும் இழக்கும் நிலை தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.