தொழில்நுட்பத்தில் அபார திறமை : விமானத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் இலங்கை மாற்றுத்திறனாளி!!

246

 
இலங்கையில் விமானம் தயாரிக்கும் ஏழ்மையான நபர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

அத்துருகிரிய – ஜயந்தி மாவத்தையிவில் வசித்து வரும் ராமசந்திர யசபால ஹெலிகொப்டர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு வயது 55.

பிறவியிலிருந்து வாய் பேச முடியாத குறைப்பாட்டை கொண்டுள்ள இவர், தொழில்நுட்ப ரீதியான செயற்பாட்டில் அபார திறமையை கொண்டுள்ளார்.

சிறு உபகரணங்களை பயன்படுத்தி பறக்கும் சிறிய ரக விமானத்தை தயாரித்து வெற்றி கண்டுள்ளார். அதற்கு மேலதிகமாக பல உபகரணங்களையும் சொந்த முயற்சியில் தயாரித்து வருகிறார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட ராமசந்திர, பெரிய ஹெலிகொப்டர் ஒன்றை உருவாக்குவதே எதிர்கால கனவு.

இந்த திறமைகளை கொண்டு மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆவர்வமாக உள்ளேன். அதற்காக தொழில்நுட்ப கல்லூரியில் வாய்ப்பு கிடைத்தால் நல்லது. எனது திறமையை முழுமையாக வெளிக்காட்ட என்னிடம் போதுமான நிதி வசதி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராமசந்திரவின் மனைவியும் பிறவியிலிருந்து வாய் பேச முடியாதவர் ஆவார்.

அண்மைக்காலமாக இலங்கையை சேர்ந்த பலரும் தொழில்நுட்ப ரீதியாக பல முன்னேற்றங்களை கண்டுள்ளனர். இதற்கான சரியான வளம் மற்றும் நிதி கிடைக்கும் பட்சத்தில் இலங்கையும் சக்தி மிக்க நாடாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.