வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு யுரேனஸ் இளைஞர் கழகத்தால் பரிசில் அன்பளிப்பு!!

502

வவுனியா யுரேனஸ் இளைஞர் கழகத்தால் சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டிகளுக்கு ரூபா 12,000 பெறுமதியான பரிசில்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று(01.03) சமளங்குளம் பாடசாலையில் இடம்பெற்றது.

இதில் யுரேனஸ் இளைஞர் கழக தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் பரிசில்களை பாடசாலை அதிபரிடம் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் இளைஞர் கழக உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.