வவுனியாவில் இன்று (02.03.2017) காலை 7மணியளவில் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓமந்தையிலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த பார ஊர்தியில் ஜேசிபி ஏற்றப்பட்டு வவுனியாவிற்கு கொண்டு வந்தபோது எதிர்பாராமல் பாரஊர்தி தடம் புரண்டதில் பார ஊர்தியில் பயணித்த மூவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.











