நெடுவாசல் போராட்டம் : உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்த சிறுவன்!!

624

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு புரட்சியை அடுத்து நெடுவாசல் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் உலகெங்கும் இருந்து தமிழர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நெடுவாசல் மற்றும் அதனனை சுற்றுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என பெருந்திரளாக போராட்டத்தில் பங்குபெற்று வருகின்றனர்.

போராட்டம் என்றால் வன்முறை, பொது சொத்துக்கள் சேதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஆனால் தமிழர்கள் அறவழியில் எந்தவித இடையூறும் இல்லாமல் லட்சக்கணக்கானோர் ஒன்றிணைந்து திருவிழா கோலம் பூண்டதுபோல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த போராட்டத்தில் உலகளவில் தமிழர்களை கவர்ந்துள்ளான் ஒரு சிறுவன். அந்த சிறுவன் முதுகில் குத்தாதே என்று பின் புறத்திலும் வயிற்று பகுதியில் வயிற்றில் அடிக்காதே என்று முன்பகுதியிலும் எழுதி போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளான்.

சிறுவனின் இந்த போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை ஆனந்தப்படுத்தும் விதமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.