வவுனியாவில் தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டம் : ஊடகவியலாளர்களும் பங்கேற்பு!!

624

 
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 7ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த (28.02.2017) மதியம் 2.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு ஜனாதிபதிக்கு தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (02.03.2017) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

இப் போராட்டத்தில் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.