வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (02.03.2017) மதியம் 1 மணி தொடக்கம் 2 மணி வரை வைத்தியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாலபே தனியார் வைத்திய கல்வி வழங்கும் நிறுவனத்தினை அரசுடைமையாகுமாறு அரசினை வலியுறுத்தும் முகமாகவே இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வைத்திய சேவையின் இதயத்தை காப்போம், போலிப் பட்டம் விற்கும் சைட்டத்தினை மூடு என பல்வேறு பாதாதைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



























