அப்பாவின் நினைவாக இருந்தவற்றை நிர்மூலமாக்கிவிட்டனர் : ஒருபெண்ணின் கதறல்!!

217

எங்கள் அப்பா நடத்திய கடையை காணவில்லை. அவர் கஸ்டப்பட்டு கட்டிய வீட்டையும் தரைமட்டம் ஆக்கிவிட்டார்கள். அப்பாவின் நினைவாக இருந்தவை எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன என கேப்பாப்புலவு மக்களுள் ஒருவரான சதானந்தன் தயாழினி தெரிவித்துள்ளார்.

பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் நேற்று விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டன. இந்நிலையில் தனது சொந்தக் காணியை சென்று பார்வையிட்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இறுதி யுத்தத்தின் போது பிலக்குடியிருப்பில் இருந்து இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் குடியமர்ந்தோம். அப்போது இராணுவத்தினர் ஏவிய எறிகனை வீச்சினால் எங்கள் அப்பா உயிரிழந்தார்.

அத்துடன், ஏற்கனவே யுத்த அனர்த்தத்தினால் எனது சகோதரனையும் இழந்துவிட்டேன். இப்போது எங்கள் காணியை பார்க்கும் போது அண்ணாவுடன் துள்ளி விளையாடிய நினைவும், அப்பாவின் கஸ்டங்களும்தான் நினைவிற்கு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.