கடற்பரப்பில் வயோதிபரின் சடலம் மீட்பு!!

468

 
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லடி – நாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கடலுக்கு மீன்பிடிப்பதற்காக இன்று அதிகாலை சென்ற மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு 55, 60 வயது இருக்கலாம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதேவேளை இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.