லண்டனில் வெடித்துச் சிதறிய இரண்டாம் உலகப்போர் குண்டு : பீதியில் வெளியேறிய மக்கள்!!

256

 
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர் குண்டு பாதுக்காப்பாக வெடித்துச் சிதறவைத்து அழிக்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வடமேற்கு லண்டனில் Brondesbury பூங்காவில் கடந்த வியாழக்கிழமை இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய பெரிய ஜேர்மன் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த குண்டு எந்த நேரத்திலும் வெடித்து விடுமோ என்று அவர்கள் பீதியில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

கண்டு பிடிக்கப்பட்ட குண்டின் எடை சுமார் 500lb இருக்கும் என்று கூறப்பட்டது. இதனால் அந்த வெடிகுண்டை ஒரு வெட்ட வெளியான இடத்தில் வைத்து அதிகாரிகள் வெடிக்க வைத்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோவையும் தற்போது வெளியிட்டுள்ளனர். இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் டுவிட்டரில் பாரிய வெடிகுண்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டுவிட்டது என்றும் இதற்கு உதவிய அதிகாரிகளுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது அக்குண்டு எந்த ஒரு பாதிப்புமின்றி அழித்துவிட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.