
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முக்கிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
வடக்கு மாகாண மக்களினால் வழங்கப்பட்ட ஆணையை கூட்டமைப்பு கட்டிக் காக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார். குறிப்பாக மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கூட்டமைப்புடன் செயற்படத் தயார். மாகாணத்தின் இளைஞர் யுவதிகளின் அபிவிருத்தியை கூட்டமைப்பு உறுதி செய்ய வேண்டும்.
தேசிய நலன்களையும் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.





