
பொலிவுட்டில் பிசியாகிவிட்ட பிரபுதேவா தற்போது ஷாகித் கபூர் நடிப்பில் ராம்போ ராஜ்குமார் என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து அஜய் தேவ்கான் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ஆக்ஷன் ஜாக்சன் என்று பெயர் வைத்திருக்கிறார்.
இப்படத்தில் அஜய் தேவ்கானுடன் மூன்று நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பிரபுதேவா தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ராம்போ ராஜ்குமார் படத்திலும் நடித்து வருகிறார். இன்னொருவர் யாமி கௌதம். மூன்றாம் கதாநாயகியின் தேர்வு நடந்து வருகிறது.
ராம்போ ராஜ்குமார் படத்தின் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தின் பணிகள் முடிவடைந்ததும ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் வேலைகளில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.





