விபசாரத்துக்காக 4000 பெண்களை கடத்தி 250 கோடி ரூபா சம்பாதித்த தம்பதி கைது!!

431

4000 இளம் பெண்­களை விப­சா­ரத்­துக்­காக கடத்தி 250 கோடி ரூபா சம்­பா­தித்த தம்­ப­தி­யி­னரை டில்லி பொலிஸார் கைது­செய்­துள்­ளனர்.

இந்­தி­யாவின் பல்­வேறு பகு­தி­களில் இருந்தும் வெளி­நா­டு­க­ளுக்கு பங்­க­ளாதேஷ் வழி­யாக பெண்கள் கடத்­தப்­படும் கொடூரம் ஓசை­யின்றி நடந்து வரு­கி­றது. குறிப்­பாக ஆந்­திரா, கர்­நா­டகா, ராஜஸ்தான், மேற்கு வங்­காளம் மாநி­லத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் கடத்­தப்­ப­டு­வதை உள­வுத்­து­றை­யினர் கண்­ட­றிந்துள்­ளனர்.

அந்­த­ வ­கையில் பெண்­களை கடத்தும் கும்­பலை பிடிக்க நாடெங்கும் தீவிர தேடுதல் வேட்டை நடத்­தப்­பட்­டது.
அப்­போது டில்­லியைச் சேர்ந்த அபக் உசேன், சாய்ரா பேகம் என்ற கணவன் மனை­வியை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

i3இது குறித்து அவர்­க­ளிடம் விசா­ரணை நடத்­தப்­பட்ட போது, அவர்கள் பெண்­களை கடத்தி, விப­சா­ரத்தில் ஈடு­ப­டுத்­து­வ­தையும், விற்­பனை செய்­வ­தையும் மிகப்­பெ­ரிய தொழில் போல செய்து வரு­வதை கண்­டு­பி­டித்­தனர்.

இவர்கள் கடந்த 10 ஆண்­டு­க­ளாக சுமார் 4,000 இளம்­பெண்­களை ஏமாற்றிக் கடத்தி விப­சா­ரத்­துக்­காக மற்­ற­வர்­க­ளிடம் விற்­பனை செய்து இருப்­பது தெரிய வந்­தது.

ஒவ்­வொரு பெண்­ணையும் விற்கும் போதும் இலட்­சக்­க­ணக்கில் பணம் கிடைத்­ததால், நாள­டைவில் அவர்கள் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் புரோக்­கர்கள், ஏஜெண்­டு­களை நிய­மனம் செய்து பெண்­களை கடத்தி விற்­பனை செய்­வதை விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளனர்.

பெண்­களை கடத்தி விற்­பனை செய்­வதன் மூலம் அவர்கள் மிகக்­கு­று­கிய காலத்தில் ரூ. 250 கோடி வரை சம்­பா­தித்து இருப்­பது தெரிய வந்­துள்­ளது. இந்த பணத்தை கொண்டு அவர்கள் டில்லி உட்­பட பல இடங்­களில் சொகுசு பங்­க­ளாக்கள் வாங்கி உள்­ளனர்.

டில்லி புற­நகர் பகு­தியில் பெரிய பண்ணை வீடும் வாங்கி, அங்கு வசித்து வந்­தனர். இவர்கள் மீது சந்­தேகம் வந்து விடக்­கூ­டாது என் ­ப­தற்­காக உசேனும், சாய்ரா பேகமும் 2 போலி நிறு­வ­னங்­களை நடத்தி வந்­தனர். பெண்­களை விற்­பனை செய்­வ­தற்கு அவர்­க­ளது நிறு­வ­னங்கள் உத­வி­யாக இருந்­துள்­ளன.

10 ஆண்­டு­க­ளுக்கு முன்பு வரை அபக்­உ­சேனும், சாய்ரா பேகமும் ஏழை­யாக இருந்­த­வர்கள். இரு­வரும் வேலை தேடி டில்லி சென்­றுள்­ளனர். ஐத­ரா­பாத்தைச் சேர்ந்த அபக்­உசேன், டில்லி சென்று ஒரு நிறு­வ­னத்தில் 3,000 ரூபா மாத சம்­ப­ளத்தில் பணி புரிந்­துள்ளார்.

அப்­போது அவ­ருக்கு உத்­த­ர­பி­ர­தேச மாநிலம் மொர­தா­பத்தைச் சேர்ந்த சாய்ரா அறி­முகம் ஆகி­யுள்ளார். சாய்ரா விப­சார தொழிலில் ஈடு­பட்­டி­ருந்தார். அவரை 1999ஆம் ஆண்டு அபக்­உசேன் திரு­மணம்செய்து கொண்டார். திரு­ம­ணத்­துக்கு பின்னர் அவர்கள் இரு­வரும் சேர்ந்து பெண்­களை கடத்தும் தொழிலில் ஈடு­பட்­டுள்­ளனர்.

குறு­கிய காலத்தில் ஏரா­ள­மான பெண்­களின் விப­சாரம் மூலம் அவர்கள் அதி­க­ளவில் பணம் சம் ­பா­தித்­துள்­ளனர்.
தற்­போது கைதாகி சிறை­யி­லுள்ள அவர்­க­ளுடன் பெண்­களை கடத்­திய குற்­றத்தில் 10 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அபக்­உசேன் – சாய்ரா இரு­வரும் பெண்­களை கடத்தி விற்று சம்­பா­தித்த பணம் மூலம் வாங்கிய 18 பங்களாக்கள், 5 கார்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதில் ஜெய்ப்பூரில் உள்ள ரூ. 35 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு, பகவன் நகரில் உள்ள ரூ.12 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாக்களும் உள்ளடங்குவதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.