புலிக்குட்டிகளை பராமரித்து வரும் நாய்!!(காணொளி)

528

 
தாய்ப் புலியால் கைவிடப்பட்ட மலேயா புலிக்குட்டிகள் மூன்றை, நாயொன்று பராமரித்து வரும் அபூர்வ நிகழ்வு அமெரிக்க மிருகக்காட்சிசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் யோகியியோ மாகாணத்திலுள்ள சினிசினாட்டி மிருககாட்சிசாலையில், தாய் புலியால் கைவிடப்பட்டு சென்ற மூன்று மலேயா புலிக்குட்டிகளை, அவுஸ்திரேலிய வாசத்தை சேர்ந்த நாயொன்று பராமரித்து வரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த புலிக்குட்டிகள் கடந்த பெப்ரவரி மாதம் பிறந்துள்ளதோடு, குறித்த புலிக்குட்டிகளின் தாய், அவற்றை கைவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் மிருக்காட்சிசாலையில் பணியிலிருந்த பெண் பணியாளர் தனது வீட்டிற்கு எடுத்து சென்று பராமரித்து வரவே, சிரா, படாரி மற்றும் இஸ்ஸி என பெயரிடப்பட்ட மூன்று குட்டிகளும் அரவணைப்பின்றி கத்தி வந்துள்ளன.

இந்நிலையில் குறித்த பணியாளரின் வீட்டில் வளர்த்து வந்த ஆறு வயதான பிளாக்கேலி எனும் அவுஸ்திரேலிய இன நாய், மூன்று குட்டிகளையும் அரவணைத்து பராமரித்து வருவதோடு, குட்டிகளுடன் விளையாடி வருகின்றதாக குறித்த மிருகக்காட்சிசாலை தரப்பு தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.